நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை .
வலிமை படத்தின் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் படத்தின் கதாநாயகி ஹீமா குரேஷி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்ட பலர் இருக்கின்றனர் .