ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற திட்டத்தின் கீழ் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழிலாளர் துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு “ஆபரேசன் ஸ்மைல் 2021” என்ற திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற 15-ஆம் தேதி வரை ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2-ஆம் தேதி முதல் 5 தேதி வரை திருவான்மியூர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு போன்ற பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது போலீசாரால் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் ( தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் ) சட்டத்தின் கீழ் இந்த குழந்தைகளை பணியில் அமர்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர் உதவி கமிஷனர் 15 ஆம் தேதி வரை இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.