தமிழக அரசு சார்பில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்கள் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த மாணவர்கள் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. இந்த உத்தரவினை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்வு ரத்து செய்தது விதிகளுக்குப் புறம்பானது, எனவே தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய விவரங்களை அனைத்து பல்கலைக்கழகதிலிருந்து பெற்று மூன்று வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலை கழக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் அரசு சார்பில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடையும் என தெரிவித்துள்ளது. இதற்கான விவரங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும் என்று கூறப்பட்டுள்ளது.