சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை ஆகிய சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, கொடியைப் பயன்படுத்தி சசிகலா தமிழகம் வரக்கூடாதென தமிழக டிஜிபி திரிபாதியிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரம் நடத்த சதி செய்கிறார்கள். அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டி அந்த மனுவை கொடுத்திருந்தார்கள்.
நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். 2/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
இந்த நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். 4/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு,அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 5/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.