Categories
உலக செய்திகள்

யாரும் வராதீங்க.. நானே பிடிக்கிறேன்… பிரதமருக்கு குடைபிடித்த ஜனாதிபதி… வைரல் வீடியோ…!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எழிஷி அரண்மனைக்குச் சென்றார். அதன்பின் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அவர்கள் மழையில் நனையாமல் இருக்க பெண் உதவியாளர் ஒருவர் வந்து மாக்ரோனுக்கு ஒரு கருப்பு குடையை வழங்கினார்.

ஆனால் மக்ரோன் அதனை ஸ்லோவாக்கியா பிரதமருக்கு மேல் பிடித்தார். அதன் பின் மற்றொரு உதவியாளர் பெண் ஒருவர் வந்து முதல் வந்த உதவி பெண்ணிடம் குடையை கொடுத்தார். அப்பெண் குடையை மைக்ரோனுக்கு மேல் பிடித்தார். அதன்பின் மக்ரோன்,ஸ்லோவாக்கியா பிரதமர்க்கு மேல் பிடித்து இருந்த கூடையை இரண்டாவதாக வந்த உதவி பெண் வாங்க முயற்சித்தார்.

ஆனால் குடையை மக்ரோன் தராமல் மறுத்துவிட்டார். சிறிது நேரத்தில் செய்தியாளர்களின் சந்திப்பும் முடிவடைந்தது. அதன்பின் எலிசி அரண்மனைக்குள் இருவரும் செல்லும் போது ராணுவ வீரர் ஒருவர் வந்து மக்களின் குடையை வாங்கும் முயற்சித்தார். ஆனால் அப்போதும் மக்ரோன்  வழங்காமல் தானே கடைபிடித்து வந்தார். அதன் பின் இரண்டாவதாக வந்த பெண் உதவியாளரும் திரும்பி வந்து குடையை கேட்டார்.

ஆனால் அவரிடமும் மக்ரோன் குடையை அளிக்கவில்லை. அதன்பின் அரண்மனைக்கு உள்ளே செல்லும் வழியில் உள்ள உச்சிபடியில் ஏறும் போது மக்ரோன் அந்த குடையை ஸ்லோவாக்கியா பிரதமரிடம் கொடுத்துவிட்டு முககவசம் அணிந்து கொண்டார். அதன்பின் அங்கிருந்து உதவியாளர் ஒருவர் பிரதமர் வைத்திருந்த குடையை வாங்கிக்கொண்டார் . யாரிடமும் குடையை தராமல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |