கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சுப காரியங்கள் இனிதே கைகூடி வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.