திராவிட முன்னேற்ற கழகம் சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு சில வார்த்தைகளை நீக்கி தமிழிலேயே மிக முக்கியமான வார்த்தைகளை தொடங்குவதற்கு காரணமானவர் திராவிட இயக்க எழுத்தாளர் செங்குட்டுவன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் மறைந்த திராவிடஇயக்க எழுத்தாளர்கள் உடலுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் தான் செங்குட்டுவன் என தெரிவித்தார். அண்ணா, கருணாநிதி ,பேராசிரியர் அன்பழகன் ஆகியோர்களுடன் நெருக்கமாக பழகி தேர்தல் களத்தில் சிறப்பாக செங்குட்டுவன் பணியாற்றினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அபேட்சகர் என்ற வடமொழி சொல்லை எடுத்து தூய்மையான தமிழ் சொல்லிலேயே வேட்பாளர் என்ற பெயரை அறிவித்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதை அறிவித்து காட்டியவர் மறைந்த செங்குட்டுவன் என்பதை நான் இந்த நேரத்திலேயே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கழகத்தைத் தோற்றுவித்த நேரத்தில் இருந்து பணியாற்றிய தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர்களில் செங்குட்டுவனும் ஒருவர். அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய மூத்த ஆசிரியர் போல இருந்தவர்தான் மறைந்த அண்ணன் செங்குட்டுவன் அவர்கள் என குறிப்பிட்டார்.