வேடிக்கைபார்த்து கொண்டிருந்த சிறுமியை கடற்சிங்கம் ஒரு கடலுக்குள் இழுத்து செல்லும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கனடா நாட்டில் உள்ள ரிச்மாண்ட் நகரத்தில் உள்ள கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த சிங்கங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சிறுமி ஒருவரும் தடுப்பு சுவரை உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது நீந்தி கொண்டிருந்த கடல் சிங்கம் உட்கார்ந்துகொண்டிருந்த சிறுமியின் உடையை பிடித்து இழுத்து சென்றுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் தாமதிக்காமல் கடற்கரையில் குதித்து சிறுமியை காப்பாற்றியுள்ளார். இதனை அங்கிருந்து வேடிக்கை பார்த்த நபர் ஒருவர் விடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.