Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்… வெளியான தகவல்கள்…!!!

நடிகர் தனுஷ் ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது . இதில் கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது .

Image result for danush

ரூஸோ  சகோதரர்கள் இயக்கும் இந்த படத்தில் கிரிஸ் ஈவன்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . கடந்த ஜனவரி மாதம் தொடங்க வேண்டிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது . இந்நிலையில் நடிகர் தனுஷ் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி ‘தி க்ரே மேன்’  படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை படமாக்கப்பட இருப்பதாகவும் இதன் பின்னர் தனுஷ் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது ‌ .

Categories

Tech |