Categories
சினிமா தமிழ் சினிமா

நட்சத்திரம் போல ஜொலிக்கும் நக்ஷத்ரா… வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ…!!!

நடிகை நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் சீரியல்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நக்ஷத்ரா . இவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் ,ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் . தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் சீரியலிலும் நடித்துள்ளார் . மேலும் நக்ஷத்ரா மிஸ்டர் லோக்கல், வாயை மூடி பேசவும் ,இரும்பு குதிரை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் .

Image result for nakshatra engagement photos

கடந்த ஜனவரி 22ஆம் தேதி நடிகை நக்ஷத்ரா தனது காதலர் ராகவ்வை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார் . இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி ராகவ் -நக்ஷத்ரா இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்துடன் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா நிச்சயதார்த்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தங்க நிற புடவையில் நட்சத்திரம் போல மின்னும் நக்ஷத்ராவின் இந்த அழகிய நிச்சயதார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . விரைவில் இவர்கள்  திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |