Categories
தேசிய செய்திகள்

இனிமே எவனும் சீண்ட மாட்டான்… புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்…!!!

தமிழகத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் வரதட்சணை கொடுமை, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரதட்சணை கொடுமை, அதற்கான மரணம் ஏற்படுவது ஆகியவற்றுக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை தண்டனை விதிக்கப்படும். பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் தாக்குவது, பாலியல் குற்றங்கள் ஆகியவற்றுக்கான தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரையும், பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரையும் தண்டனை விதிக்கப்படும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |