Categories
உலக செய்திகள்

இனிமேல் பணிக்கு வரவேண்டாம்… தம்பதிகளை திடீரென வெளியேற்றிய அதிகாரிகள்… நீடிக்கும் மர்மம்..!!

கனடாவில் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றிய தம்பதிகளை காரணம் கூறாமல் அதிகாரிகள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவை சேர்ந்த தம்பதிகள் Dr. Xingguo Qui மற்றும் Kedding cheng இருவரும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இத்தம்பதியினர் திடீரென்று ஆய்வகத்திலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றபட்டனர். சக அறிவியலாளர்களுக்கு இத்தம்பதிகள் இனிமேல் பணிக்கு வரமாட்டார்கள் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதற்காக அவர்கள் வெளியில் அனுப்பப்பட்டார்கள் என்பதற்கான காரணங்கள் ரகசியமானவை என்றும் அதனை தெரிவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் Dr. Xingguo Qui எபோலா போன்ற தீவிரமான வைரஸ்களை  சீனாவின் வூஹான் பகுதியின் ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

மேலும் அவர் சீன நாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அங்கிருக்கும் மாணவ மாணவிகளை உதவிக்காக அழைத்தும் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் இதில் எந்த காரணங்களுக்காகவும் அவர்களை வெளியேற்றவில்லை என்று கூறிவிட்டனர். இதனால் ஆய்வகத்தில் இருந்து தம்பதியினர் வெளியேற்றப்பட்டதற்கான சந்தேகம் நீடித்து வருகிறது.

Categories

Tech |