Categories
தேசிய செய்திகள்

“குழந்தை அழுகுது, இனிப்பு வாங்க 5 ரூபாய் கொடுங்க”… ஆத்திரத்தில் 20 மாத குழந்தையை கதவில் அடித்து… கணவனின் வெறிச்செயல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்க ஐந்து ரூபாய் கேட்டதால் 20 மாத குழந்தையை தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம்,  கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் உயிக். இவர் மனைவி வர்ஷா. இவர் கடந்த 2ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரின் மனைவி வர்ஷா 20 மாத குழந்தை அழுது கொண்டே இருப்பதால் ஐந்து ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அவர் கணவர் சில்லறை இல்லை என்று கூறியுள்ளார்.

குழந்தை அழுது கொண்டிருந்தது .ஆத்திரமடைந்த விவேக் குழந்தையை கையில் தூக்கி வேகமாக அடித்து அதனை தடுக்க முயன்ற வர்ஷாவையும்  தள்ளி விட்டு சென்றிருக்கிறார். பதறி போன வர்ஷா குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு செல்லும் முன்பாகவே குழந்தை இறந்துவிட்டது. கணவனின்  கோபத்தால் குழந்தையை இழந்த வர்ஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் வெறும் 5 ரூபாய் இனிப்புக்காக 20 மாத குழந்தையை கதவில் பலமாக அடித்துக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அவருக்கு மது போதை பழக்கம் இருப்பதாகவும், அதனால் அடிக்கடி கொடுமைப்படுத்தி வருவதாகவும் வர்ஷா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |