இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வுகள் நடக்க இருப்பதால் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் மத்திய கல்வி துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் மே மாதம் 14ஆம் தேதி ரமலான் திருநாள் அன்று விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் ரமலான் திருநாள் ஒருநாள் முன்னதாகவோ, பின்னதாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கும்.
இதனை கணக்கில் கொள்ளாமல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மே 13ஆம் தேதி மற்றும் மே 15 தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மாணவர்கள் அவர்களுக்கு முக்கிய திருநாளன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது தவறானது. இதனால் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.