கனடாவின் பிரபல நடிகர் வயது முதிர்வினால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த நடிகர் பிளம்மர். இவர் கடந்த 1958 ஆம் வருடத்தில் ஸ்டேஜ் ஸ்டிரைக் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி வைத்துள்ளார். மேலும் பிளம்மர் மூன்று முறை திருமணம் செய்தவர். சவுண்ட் ஆப் மியூசிக் என்ற திரைப்படத்தில் கேப்டன் வான் டிராப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2010ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான பிகினர்ஸ் என்ற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் தன் வீட்டில் இருந்தபோது வயது முதிர்வின் காரணத்தால் உயிரிழந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த தி லாஸ்ட் புல் மெஸர் என்ற திரைப்படம் இவரின் திரையுலக வாழ்வின் கடைசி படமாகும். திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.