Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களை உடனடியாக அழைத்து பேச வேண்டும்… டிடிவி.தினகரன் அதிரடி…!!!

தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை உடனடியாக அழைத்து பேசி தீர்வு காணவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அவரின் வருகை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரிய பெருமக்களை தொடர்ந்து போராட விட்டு வேடிக்கை பார்ப்பது சரியானது அல்ல என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரி யர்கள் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |