பெண்களுக்கு உதவிடும் எளிய சமையல் குறிப்புகளை குறித்து இதில் பார்ப்போம்.
வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு சமைத்தால் மிகுந்த மணமுடன் இருக்கும்.
சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான இருக்கும்.
இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள் பொரியல் மொறு மொறுப்பாக சுவை யாக இருக்கும் .
முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வையுங்கள்.