ஆன்லைனில் சூதாட்ட செயலிகளுக்கு தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகளை தடைசெய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியையும், தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி ட்ரீம் லெவன் அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ட்ரீம் லெவல் செயலியை தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழக எல்லைக்கு உட்பட்டவர்கள், தமிழக வங்கி கணக்கு கொண்டவர்கள் விளையாட முடியாது என்றும் அறிவித்துள்ளது. மீறி விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.