Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குஷியான குடிசை வாசிகள்… எல்லா வசதியும் இருக்கு… இனி எந்த கவலையும் இல்ல… திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த 45 குடிசைவாசிகள், ஜீவானந்தம் ரோடு பகுதியை சேர்ந்த 3 குடிசை வாசிகள், பெரும்பள்ளம் ஓடை கள்ளியங்காடு ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசித்து வந்த 101 குடிசை வாசிகள், கந்தன் தோட்டம் பிச்சைக்காரன் பள்ளம் போன்ற பகுதிகளில் வசித்துவந்த 43 குடிசைவாசிகள் என மொத்தம் 192 குடிசை வாசிகளுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடியில் படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுமையும் மழைநீர் வடிகால், கழிவுநீர் அகற்றும் வசதி, காங்கிரட் ரோடு, தண்ணீர் தொட்டி, பூங்கா மற்றும் தெரு விளக்குகள் போன்ற அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் திறப்பு விழாவையொட்டி எம்.ஜி.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கியுள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இந்த குடியிருப்பின் நிகழ்ச்சியை திறந்து வைத்ததும், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா ஈரோட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்.

Categories

Tech |