Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம்… “தொடரும் வேலை இழப்பு”… கனடாவில் அதிகரிப்பு..!!

கொரோனா  பெரும் தொற்று காரணமாக கனடாவில் தொடர்ந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். வேலை இல்லாதவர்கள்  சதவீதம் 9.4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சதவீதம் முந்தைய மாதத்தில் 8.8 ஆக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டின் பெரும்பகுதி கனடாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன. கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கட்டுப்பாடுகள் தொடங்கியபோது இருந்ததைக் காட்டிலும் இப்போது வேலைவாய்ப்பு சந்தை மேம்பட்டு இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Categories

Tech |