Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லேட் ஆகிருச்சு… தாமதமாக வந்ததற்கு தாக்குதல்… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலமான அடி…!!

108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன.

அப்போது குறிப்பிட்ட தூரத்தை குறைந்த வினாடிகளில் கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் வரட்டனபள்ளி பகுதியில் வசித்து வந்த லோகேஷ் என்ற சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காயமடைந்த சிறுவனை பொதுமக்கள் போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் தாமதமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால், அங்கிருந்த சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கியபோது பக்கவாட்டில் இருந்த வாகனத்தின் கண்ணாடி உடைந்துவிட்டது. மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சென்றாயன் என்பவரையும் அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |