50 வயது முதியவர் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் துரைராஜ் மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையானது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போலீசார் துரைராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.