ஏடிஎம்களில் தோல்வியடைந்த பணபரிவர்த்தனைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நம்மில் பலரும் நம்முடைய வங்கிக்கணக்கில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்காமலேயே அவசர அவசரமாக பணத்தை எடுக்கிறோம். அச்சமயம் உங்கள் வங்கிக்கணக்கில் போதிய பேலன்ஸ் இல்லாவிட்டால் போதிய பணம் இல்லாதது குறித்த செய்து உங்களுக்கு திரையில் தோன்றும். அப்படி நீங்கள் போதிய பணம் இல்லாத சமயத்தில் எடுக்க முயன்ற தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
போதிய பேலன்ஸ் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு முறையும் ஒரு பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.20 க்கு மேல் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி புதிய அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய கூடுதல் பணபரிவர்த்தனைகளுக்கு பத்து முதல் இருபது ரூபாய் வசூலிக்கப்படும் .எஸ்பிஐ கஸ்டமர் 8 முறை (5 எஸ்பிஐ ஏடிஎம்கள் -3 பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து) கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்கலாம்.