தனது மனைவியை மட்டுமே ரசித்து போட்டோ எடுத்த போட்டோகிராபரை கணவன் அடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்வு ஒன்றில் மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை போட்டோகிராஃபர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த போட்டோகிராபர் மணமகளை மட்டும் சரியாக போஸ் கொடுக்குமாறு நிற்க வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சரியாக இப்படி நில்லுங்கள் என்று சொல்லி கன்னத்தில் கை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை திடீரென்று ஆத்திரத்தில் போட்டோகிராபரை பளார் என்று ஒரு அடி அடித்துள்ளார்.
அப்போது இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த போட்டோகிராபர் குழப்பத்தில் நிற்கிறார். ஆனால் புதுப்பெண் தன்னுடைய கணவர் போட்டோகிராபரை அடித்த உடனே சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு குலுங்க குலுங்க சிரித்து, தரையில் விழுந்து சிரிக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தவர் மனைவியை பார்த்தால் என்ன நாடாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
https://twitter.com/i/status/1357675009905291264