Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் – கடம்பூர் ராஜு கடு கடு…!!

நான் பேரம் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்கவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் தான் பேரம் பேசியதாக மு.க ஸ்டாலின் கூறியதற்காக கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் பேரம் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வேன். முதல்வர், அமைச்சர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |