Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

போட்றா வெடிய…! இந்தாங்க ஸ்வீட் எடுங்க… கொண்டாடும் அதிமுக நிர்வாகிகள் ..!!

தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம்  ஜலகண்டபுரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விவசாயக்கடன் தள்ளுபடி செய்துள்ள அறிவிப்பை நங்கவள்ளி  அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் அவைத்தலைவர் ராஜி தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மேலும் ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் , சித்து , ராஜ் , சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Categories

Tech |