இன்னும் இரண்டு பேரழிவுகள் உலகத்தை தாக்க வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் உலக நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இந்த கொரோனா பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் உலகிற்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு ஒரு வைரஸ் தாக்க வரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்திருந்தார்.
அதேபோல் கொரோனா வைரசால் உலக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் இரண்டு பேரழிவுகள் வர வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் மீண்டும் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பே அடங்காத நிலையில் இன்னும் இரண்டு பாதிப்புகளா? என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.