காலநிலை மாற்றம் உலகிற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒவ்வொரு கொடிய நோயோ அல்லது இயற்கை பேரழிவுகளோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது மனித இனங்களே. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் காலநிலை மாற்றம் உலகிற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நாம் உதவியற்ற நிலையில் இருக்கிறோம் எனவும் ,காலநிலை மாற்றத்தை நம்பிக்கையுடன் எதிர் கொண்டால் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.