அதிமுக தலைவர்கள் என் மீது வழக்கு போடட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் தான் பேரம் பேசியதாக மு.க ஸ்டாலின் கூறியதற்காக கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நான் பேரம் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வேன். முதல்வர், அமைச்சர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு என் மீது வழக்கு தொடரட்டும் என்று திமுக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். அதிமுக தலைவர்கள் என் மீது வழக்கு தொடர போவதாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரை என்று தெரிவித்வழக்கு போடவில்லை என்று கூறியுள்ளார்.