Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து 25 பவுன் நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமம்தித்தை கிராமத்தை  சேர்ந்த மென்பொறியாளரான  சசிக்குமார்  குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அனுமன் தீர்த்தம் கிராமத்தில் வசிக்கும் சசிகுமாரின் தாயார் மாலா உறவினரை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சேலம் சென்றுள்ளார்.

இந் நிலையில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 25 பவுன் தஙக் நகை ஒரு லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று அதிகாலையில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |