கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
வடமாநிலங்களில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலையில் காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதில் இமாச்சல பிரதேசம் தலைநகரான சிம்லாவில் கடும் பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. இதனால் சாலையில், ரயில்வே தண்டவாளங்கள் முழுவதும் பனி படர்ந்து காணப்படுகின்றன.
பனி பொழிவில் பல சாலைகள் முடங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் உறைந்து கிடக்கும் பனி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பனி பொலிவு காரணமாக நகரமே வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேசமயம் மலைக்குன்றுகள் மீது வென் திட்டுகள் போன்று படர்ந்திருந்த பணி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது