Categories
மாநில செய்திகள்

ரயிலில் சிக்கிய மாற்றுத்திறனாளி…. ஆபத்தில் இருந்து மீட்ட காவலர்…. குவியும் பாராட்டுக்கள் …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நகர்ந்து கொண்டிருந்த ரெயிலில்  ஏற முயன்று கீழே விழுந்த மாற்றுத்திறனாளியை விபத்தில் சிக்க விடாமல் மீட்ட ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் பான்வில் ரெயில் நிலைத்தில் நகர்ந்து கொண்டிருந்த ரெயிலில் மாற்றுத்திறனாளி  பயணி ஒருவர் ஏற முயன்றார். ஆனால் ரெயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். இதில் விபத்தில் சிக்கி இருந்த அவரை அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் ஒருவர் விரைந்து மீட்டார். இது தொடர்பான காட்சிகள் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகின. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அந்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

Categories

Tech |