Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தலா ரூ.3000….. மத்திய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ரூ.3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதன் காரணமாக பாஜக அரசு பல வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து நேற்று அசாம் மாநிலத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சுமார் 7.4 7 லட்சம் பேருக்கு தலா 3,000 ரூபாய் நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அசாம் சா பகிச்சா தன் புரஸ்கார் மேளா என்ற திட்டத்தின் மூன்றாம் பகுதியாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தலா 3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது சரியாக 7,46,627 பேரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது கூடுதலாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருமகிழ்ச்சி செய்து வந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |