தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி கே இராஜேந்திரன் அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ், மிதிலேஷ் குமார், தமிழ்செல்வன், ஆஷிஷ் பங்கரா , சைலேந்திர பாபு, கரன்சின்கா, பிரதீப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது.
அதன்பின் இந்த பெயர் பட்டியல் உச்ச நீதி மன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. அதன்படி உச்சநீதிமன்ற தீர்ப்பில் 6 மாதங்களுக்குள் ஓய்வுபெற உள்ள வரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது . அதன்படி காந்திராஜன், ரமேஷ் குடவாலா,ஜாங்கிரிட்,ஆசிஷ்பங்கர ஆகியோர் இந்த வாய்ப்பினை இழந்தனர்.
மீதமுள்ள நபர்களில் ஜே.கே திரிபாதி சிறந்த அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் என்ற நோக்கில் அவர் அடுத்த டிஜிபியாக நியமனம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது சிறைத் துறை செயலாளராக பணியாற்றிவந்த ஜே.கே திரிபாதி தற்போது தமிழகத்தின் டிஜிபியாக பதவி நியமன செய்யப்பட்டுள்ளார்