கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது பேத்தியான சௌமியா என்பவர் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து குடிசையில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் மளமளவென பரவிய தீயானது அருகில் இருந்த செங்கோடன் என்பவரது குடிசை வீட்டிலும் தீ பிடித்து விட்டது. இதனை அடுத்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கோபாலின் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிவிட்டது.
இந்த விபத்தில் சேகர் மற்றும் தங்கராஜ் இவர்களது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சி ஈடுபட்டனர். இதனை அடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் செங்கோடன் கோபால் போன்றோரின் வீடுகளும், அதிலிருந்து பொருட்களும் முற்றிலுமாக தீக்கிரையானது. இந்த தீ விபத்து ஏற்பட்ட உடனே வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.