KYC விவரங்கள் குறித்து அடையாளம் தெரியாத யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்போன் வைத்திருக்கும் நம் அனைவருக்குமே இப்போதெல்லாம் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி ஒரு வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் நம்மிடம் இருந்து வாங்கி நம்முடைய பணத்தை திருட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகிறது. இது குறித்து வங்கிகள் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை KYC தொடர்பாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எஸ்பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வாடிக்கையாளர்கள் யாரும் தங்களுடைய கேஒய்சி விவரங்களை தெரியாத நபரிடம் வழங்கிவிட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. விவரங்களை கொடுப்பதாக இருந்தால் அந்த நபரின் அடையாளம், அவர் உண்மையில் வங்கி அதிகாரி தானா? என்பதை பார்த்துவிட்டு கொடுக்க வேண்டும்.
வங்கியிலிருந்து KYC விவரங்கள் போன் மூலமாகவோ, எஸ்எம்எஸ் மூலமாகவும் உங்களிடம் கேட்பது இல்லை. எனவே வங்கிக் கிளைக்கு நீங்கள் நேரடியாக சென்று கேட்டால் பிரச்சினை ஏற்படாது.
ஆனால் ஒரு சில நேரங்களில் வீடுகளுக்கே வந்து KYC சரிபார்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்று ஏதாவது சந்தேகபடும்படியாக இருந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று SBI கேட்டு கொண்டுள்ளது.
சிலர் வீடுகளுக்கே வந்து கடன் கொடுப்பதாக கூறி வங்கி கணக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கேட்கின்றனர். நாமும் உடனே கடன் கிடைக்கிறது என்ற மனநிலையில் அவர்கள் கேட்பதை கொடுத்து ஏமாந்து விடுகிறோம். இதுபோன்று ஆவணத்தை கொடுக்கும்போது அந்த நபர் குறித்த அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.