நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க அஞ்சரை பெட்டியில் மட்டுமில்லாமல், மருத்துவ பட்டியலிலும் இதை வைத்திருக்க வேண்டும். அது என்ன என்றால் அண்ணாச்சி பூ, நட்சத்திரம் போல் இருக்கும். இது மருத்துவ பலன்களை கொண்டது.
அன்னாசிப்பூ, இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவையைக் கொண்டது. நறுமணமிக்க பொருள். இதனை நாம் மூலிகை என்று சொல்லக் காரணம் இதில் இருக்கும் ஷிகிமிக் எனப்படும் அமிலம் தான் . இது உலகமெங்கும் இன்ஃப்ளூயன்சா எதிர்ப்பு மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருள். அன்னாசிப்பூ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது.
என்னனென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு:
குழந்தையின் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
அன்னாசிப்பூ ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள்களுடன் உள்ளது. இது சருமத்தை பாதுகாக்க மிகவும் உதவுகிறது. சருமத்தின் சுருக்கங்களைக் குறைக்க, சருமத்தை பொலிவுடன் வைக்க இது உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. சுகாதார தன்மை அதிக அளவில் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் மூலம் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.
சுவாச நோய்கள் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. சுவாச நோய்கள், நோய் தொற்றுகள் இருக்கும்போது அன்னாசிப் பூவை கொதிக்க வைத்து அதன் நீரை குடித்து வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
தூக்கமின்மையை சரிசெய்யவும் உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
இந்த அண்ணாச்சி பூ இரும்பு சத்து நிறைந்தது. இதில் 13 சதவீதம் இரும்பு சத்து உள்ளது. இதை சாப்பிடும் போது ரத்த அணுக்கள் அதிகரிக்கிறது.
ஹார்மோன் மாறுபாடு உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் ஹார்மோன் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்.
புற்று நோயிலிருந்து குணப்படுத்த இது உதவுகிறது. இதில் உள்ள மருத்துவகுணம் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டி களை உருவாக்குவதே தடுக்கிறது.