எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இனி பணம் எடுக்கும் பயனாளர்களுக்கு ஒரு புதிய அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் ஏடிஎம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏடிஎம் வீட்டில் இருந்து பணத்தை எடுக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருப்பு குறைவாக இருந்தால் உங்கள் பணப் பரிமாற்றம் நடக்காது. தற்போது வரை கணக்கில் குறைவான பணம் இருப்பு வைத்திருக்கும் பயனாளர்களின் தவறு அளிக்கப்பட்டது.
ஆனால் இனி எஸ்பிஐ ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கும்போது இந்த தவறு நடந்தால் அது உங்களுக்கு பிரச்சனையாக முடியும். எஸ்பிஐ வங்கியின் புதிய விதிகள் படி, உங்கள் கணக்கில் உள்ள தொகையை விட பெரிய தொகையை நீங்கள் எஸ்பிஐ ஏடிஎம் இல் இருந்து எடுக்க முயற்சி செய்தால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் GST செலுத்த வேண்டும். நீங்கள் தெரியாமல் இந்த தவறை செய்தாலும் அபராதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும். குறைந்த இருப்பு தவிர மற்ற எந்த காரணங்களினாலும் பரிவர்த்தனை தோல்வியுற்றால் எஸ்பிஐ கட்டணம் வசூலிக்கிறது.
இதனை தவிர்ப்பதற்கு உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தகவல் உங்களிடம் இல்லை என்றால் கணக்கில் இடுகையை அறிய எஸ்பிஐ இருப்பு சோதனை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் விவரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கஸ்டமர் கேர் எண்ணுக்கு அழைத்து நீங்கள் இந்த தகவலை பெற முடியும்.
மேலும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு முன்பு உங்கள் கணக்கின் மீதமுள்ள தொகையை பற்றி தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஆன்லைன் எஸ்பிஐ பயன்படுத்தி வந்தால் அங்கிருந்து இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இவற்றைத் தவிர google.pay அல்லது போன் பே போன்ற செயலிகளிலும் பண இருப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.