அலுவல் கூட்டத்தின் போது நொறுக்குத் தீனிக்கு பதில் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அலுவல் கூட்டத்தில் பிஸ்கட், மிக்ஸர் மற்றும் வேறு ஏதேனும் நொறுக்குத் தீனிக்கு பதிலாக வால்நட்ஸ் மற்றும் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அலுவல் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இந்த மாற்றம் மற்ற அமைச்சகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.