Categories
தேசிய செய்திகள்

நாடு முழுக்க Facebook, Watsapp, Insta கணக்குகள் சோதனை?… புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்களின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அனைத்து கணக்குகளும் சோதனை செய்யப்படும்.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் தொடர்பில் உள்ளனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தரகாண்ட் மாநில காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாநிலத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில், நாடு முழுவதும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக கணக்குகள் அனைத்தும் சரி பார்க்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

Categories

Tech |