பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 29 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கேரள போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.
உலக அளவில் ஆபாச பட நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சன்னிலியோன். அவர் தற்போது பாலிவுட் கவர்ச்சிக் கன்னியாக வலம் வருகிறார். மேலும் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு போது சுற்றுப்பயணம் சென்ற சன்னி லியோன், கேரளாவில் தனது குடும்பத்துடன் சுற்றுலா செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கேரளாவில் துணிக்கடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக கூறி சன்னி லியோன் 29 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் திறப்பு விழாவுக்கு வராமல் பணத்தை ஏமாற்றி விட்டதாக துணி கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.