Categories
சினிமா தமிழ் சினிமா

‘மூன்று தலைமுறை நடிகர்கள்’… அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் அருண் விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .

நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் ‌. இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜயின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் . குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை சரேவ் சண்முகம் இயக்குகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது .

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது அப்பாவும் நடிகருமான விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌ . அதில் ‘மூன்று தலைமுறை நடித்தது . அர்னவ் தனது அறிமுகத்தில் எனது அப்பாவுடன் திரையை பகிர்ந்துகொள்ள ஆசீர்வதிக்கப்பட்டவர் . இது நம்ப முடியாத மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார் . தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Categories

Tech |