Categories
உலக செய்திகள்

“இது நடக்காத காரியம்”… எங்களுக்கு நம்பிக்கை இல்லை… பிரான்ஸ் அதிபர் வாக்குறுதிக்கு மக்கள் கருத்து..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறிய வாக்குறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்களுக்கு எப்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரியாமல் உள்ளது.

இந்நிலையில் இமானுவேல் மேக்ரோன் பிரான்சில் 2021 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்பே கோடைகாலம் முடிவடைவதற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் பிரான்சில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்த ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சுமார் 2 மில்லியன்  மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 3 லட்சம் நபர்களுக்கு மட்டும் தான் இரண்டாம் டோஸ்  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 1.7 மில்லியன் நபர்களுக்கு தற்போது வரை இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் Ifop Fiducial என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இமானுவேல் கூறிய வாக்குறுத்திகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 58% மக்கள் தெரிவித்ததோடு அவர் கூறியது இயலாத காரியம் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |