லண்டனில் ஆங்காங்கே கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்து வருவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெற்கு லண்டனில் ஐந்து இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 10 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் சாலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் குத்தப்பட்டார். அதன்பின் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கில்பர்னில் மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, இச்சம்பவம் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதுபோன்ற வன்முறைகள் தேவையற்றது. முற்றிலும் வெறுக்கத்தக்கது என்று கூறினர். மேலும் மெட்ரோ போலீசார் தெரிவித்ததாவது, சம்பவம் குறித்து இரண்டு நபர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை துவங்கியுள்ளோம் என்று கூறினர்.