Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மாற்றுதிறனாளி… சரியான நேரத்தில் காப்பாற்றிய போலீசார்… வைரலாகும் காட்சிகள்…!!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த மாற்று திறனாளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பன்வெல் ரயில் நிலையத்தில் இருக்கும் ஏழாவது பிளாட்பாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரேனு பட்டேல் மற்றும் போலீசார் ஹரிஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 3:45 அளவில் அங்கு வந்த ரயில் புறப்பட்டபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி ரயிலை பிடித்துக் கொண்டு அதன் கூடவே ஓடியுள்ளார்.

இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் பிளாட்பார இடைவெளியில் அந்த மாற்றுத்திறனாளி விழுந்து விடாமல் இருப்பதற்காக அவரைப் பிடித்து இழுத்து விட்டார். மேலும் அவர் உயிரை காப்பாற்றிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் பணியை பாராட்டி வண்ணம் உள்ளனர்.

Categories

Tech |