53 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன வாலட் ஒன்று கடல் கடந்து கண்டம் கடந்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1948 ம் வருடத்தில் Paul Grisham அமெரிக்க கடற்படையில் சேர்ந்துள்ளார். அதன் பின்பு ஆபரேஷன் டீப் பிரீசின் ஒரு பகுதிக்காக அண்டார்டிகாவிற்க்கு சென்றுள்ளார். அப்போது கடந்த 1968 ஆம் வருடத்தில் அவர் வைத்திருந்த பிரவுன் நிறத்தில் உள்ள வாலட் அப்பகுதியில் தொலைந்துள்ளது. அதன் பிறகு பல இடங்களில் அவர் தேடி பார்த்துள்ளார். எனினும் வாலட் கிடைக்காததால் அதனை அவர் மறந்துவிட்டாராம்.
இந்நிலையில் கடந்த 2014ம் வருடத்தில் ரோஸ் என்ற தீவில் இருக்கும் மெக்முர்டோ நிலையத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பிரவுன் நிற வாலட் ஒரு லாக்கரில் பின்புறம் இருந்துள்ளது. அதில் Grishamஇன் கடற்படை அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உயிரியல் மற்றும் ரசாயனம் போன்ற ஆயுதங்களால் தாக்கப்படும்போது என்ன செய்யலாம்? என்பது குறித்த குறிப்பு அட்டை உட்பட சில முக்கிய அட்டைகள் இருந்துள்ளது.
அண்டார்டிகாவில் இருக்கும் ஆய்வுக் குழுவின் தலைவர் இந்த வாலட்டை எப்படியாவது உரியவரிடம் சேர்த்து விட வேண்டும் என்று முன்னாள் பணியாளர்களில் ஒருவரை அழைத்து Grisham தற்போது எங்கு வசிக்கிறார்? போன்ற தேடுதல்களை தொடங்கியுள்ளனர். இறுதியாக 7 வருடங்களுக்கு பின்பு Grisham வடக்கு கலிபோர்னியாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரின் வீட்டிற்கே அந்த வாலட்டை அனுப்பியுள்ளார்கள்.
அதாவது கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு தான் தொலைத்த வாலட்டை திறந்து பார்த்த Grishamற்க்கு தற்போது 91 வயதாகிறது. எனினும் வாலட்டில் அவர் வைத்திருந்த முக்கிய அட்டைகள் மற்றும் பணம் அவர் வைத்திருந்தது போல அப்படியே இருந்துள்ளது. அதாவது 53 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன ஒரு பொருள் கடல் கடந்து கண்டம் கடந்து கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிசயம் என்றே கூற வேண்டும்.