Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈவினிங் ஸ்பெஷலாக… நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய… ருசியான இந்த ரெசிபிய செய்து கொடுங்க போதும்..!!

கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க் செய்ய தேவையான பொருட்கள்:

முளைகட்டிய கேழ்வரகு    – 250 கிராம்
முளைகட்டிய கம்பு                – 250 கிராம்
தேங்காய் பால்                          – 1 கப்
சுக்குத்தூள்                                  – கால் டீஸ்பூன்
ஏலப்பொடி                                   – அரை டீஸ்பூன்
கருப்பட்டி பாகு                          – 200 கிராம்
ஆப்பிள்                                          – 1
வாழைப்பழம்                             – 1
கருப்பு திராட்சை                       – 10
மாதுளை முத்து                        – 5 டீஸ்பூன்
பப்பாளிப்பழம்                            – 4 துண்டுகள்
கொய்யாப்பழம்                         – 1
மாம்பழம்                                      – 1

செய்முறை :

முதலில் கேழ்வரகையும், கம்பையும் பாத்திரங்களில் தனித்தனியாக எடுத்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, முந்தைய நாள் இரவே நன்கு உற வைத்து, முளைகட்டி எடுத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றியபின், நன்கு கொதிக்க வைத்து கருப்பட்டி நன்கு வற்றி சுண்டியதும், பாகு போல் காய்ச்சி இறக்கி வைக்கவும்.

பின்பு ஆப்பிள், வாழைப்பழம், கருப்பு திராட்சை, மாதுளை முத்துகள், பப்பாளிப்பழம்,கொய்யாப்பழம், மாம்பழங்களை எடுத்து தண்ணீரால் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கேழ்வரகையும், முளைகட்டிய கம்பையும் எடுத்து  நன்கு தண்ணீரால் சுத்தம் செய்தபின், அதை மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்ததும்,  மற்றோரு பாத்திரத்தில் வடிகட்டி அதன் பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் வடிகட்டி வைத்த பால் பாத்திரத்தை வைத்து நன்கு கொதிக்க வைத்து பால் நன்கு சுண்டும் அளவுக்கு கொதித்து, கெட்டியாக வரும் வரை நன்கு கரண்டியால் கிளறி விட்டு நன்கு வற்றி, கஞ்சி பதம் வந்ததும் அதில் ஏலப்பொடி, சுக்குத்தூள், தேங்காய்ப்பால் ஊற்றி சில நிமிடம் கிளறி விட்டபின் இறக்கி வைக்கவும்.மேலும் இறக்கி வைத்த கலவையில் சூடாக இருக்கும் போது, அதில் கருப்பட்டி பாகுவை ஊற்றி நன்கு  கலக்கி விடவும்.

இறுதியில் நறுக்கி வைத்த ஆப்பிள், வாழைப்பழத் துண்டுகள், கருப்பு திராட்சை, மாதுளை முத்துகள், பப்பாளிப்பழ துண்டுகள், கொய்யாப்பழத் துண்டுகள், மாம்பழ துண்டுகளை போட்டு நன்கு கரண்டியால் கலந்து சூடாகவோ அல்லது பிரீஸரில் வைத்து சில மணி நேரம் கழித்து எடுத்து குளிர்ச்சியாகவோ,  பரிமாறினால் ருசியான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க் தயார்.

Categories

Tech |