அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சில நடவடிக்கைகளுக்காக சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சீனாவின் வெளியுறவு விவகாரத்துறை இயக்குனரான யங் ஜெயிச்சி என்பவருடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் என்பவர் கூறியுள்ளதாவது, இரண்டு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் வழிகளை தொடர்ந்து பாதுகாக்கும் என்று அந்தோணி பிளின்கன் கூறியுள்ளார்.
மேலும் அவர் சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் வன்முறை, திபெத்தின் மனித உரிமை மீறி நடைபெறும் சம்பவங்கள் மற்றும் ஹான்காக் மக்களை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடைமுறைப்படுத்தல் போன்றவை தொடர்பில் பேசியுள்ளார். மேலும் இந்திய-பசிபிக் பிராந்தியம் தென் சீன கடல் பகுதி போன்றவற்றில் சீனா ஈடுபட்டதற்கான காரணம் தொடர்பாக ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பேசியுள்ளார். மேலும் இதுபோன்ற சர்வதேச விதிமுறை மீறல்களுக்கான நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து சீனா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அண்டோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.