மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது . இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் . இதனால் இந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் .
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 % நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.