தமிழகத்திற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் கருத்தடை, குடும்ப கட்டுப்பாடு மற்றும் காண்டம் ஆகியவற்றில் தமிழகம் சிறந்த மாநிலம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவு கருக்கலைப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக காண்டம் விற்பனை ஊரடங்கு காலத்தில் ஐந்து மடங்கு அதிகரித்ததாக ஆன்லைன் டெலிவிரி இணையதளம் ஆய்வு மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.